பச்சமலை முருகன் கோவிலில்
தங்கரதம் புறப்பாடு கோலாகலம்
கோபி, டிச. 7-
கோபி பச்சமலை முருகன் கோவிலில், திருக்கார்த்திகை கிருத்திகை விழா, சத்ரு சம்ஹார மகா ேஹாமம், 108 சங்காபிேஷகம் மற்றும் கார்த்திகை தீப விழா கோலாகலமாக, நேற்று நடந்தது. காலை, 9:00 முதல் மதியம், 12:00 மணி வரை, ஆறு கலசம் வைத்து ஆறுமுகனை ஆவகனம் செய்து, சத்ரு சம்ஹார மகா ேஹாமம் நடந்தது. பின், 108 சங்காபி ேஷகம் முடிந்து, திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. பின், இரவு தங்கமயில் தங்கரதம் புறப்பாடு நடந்தது. இதில்,
திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
இரவில் பூத்த பிரம்ம கமலப்பூ
விளக்கு வைத்து வழிபாடு
ஈரோடு, டிச. 7-
ஈரோட்டில், 6 ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் பிரம்ம கமலப்பூ, நேற்று இரவு பூத்தது.
ஈரோடு, வீரப்பம்பாளையத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார்; மனைவி பாரதி. தம்பதியர் வீட்டில் பல்வேறு வகையான அரிய பூச்செடிகளை வளர்த்து வருகின்றனர். அதுபோல், பிரம்ம கமலச்செடி கடந்த, 6 ஆண்டுக்கு முன் வளர்க்க துவங்கினர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, முதன்முறையாக மொட்டு வைத்து, இரவு, 11:30 மணிக்கு மொட்டு விரிந்து முழுமையான பூவாக காட்சியளித்தது. இப்பூவை வணங்கி, இரவிலேயே பிரம்ம கமலப்பூ உள்ள செடிக்கான தொட்டி முன் தீபம் ஏற்றி வழிபட்டனர். இந்த பூ பூப்பதை பார்த்தால் பல நன்மைகள் கிட்டும் என்பது ஐதீகம். இதையறிந்து அப்பகுதி மக்கள் பலரும், பிரம்ம கமலப்பூவை பார்த்து, வழிபட்டு சென்றனர். இப்பூவின் நறுமணம், அந்த வீதி முழுவதும் வீசியதை மக்கள் உணர்ந்தனர்.
கார் திருடிய இருவர் கைது
பெருந்துறை, டிச. 7-
பெருந்துறை அடுத்த, விஜயமங்கலம், மூங்கில்பாளையத்தை சேர்ந்த சுப்புராஜ் மகன் சபரிபாலசங்கர், 42; இவர், விஜயமங்கலம் டோல்கேட் அருகே, ஓட்டல் வைத்துள்ளார்.
கடந்த, 4ல், இவருடைய இரண்டு காரில், ஒன்றை ஓட்டல் முன் நிறுத்தி விட்டு, மற்றொரு காரில் வீட்டிற்கு சென்றார். நேற்று முன்தினம் காலை, வந்து பார்த்தபோது ஓட்டல் முன் நிறுத்தியிருந்த காரை காணவில்லை. இதுகுறித்து, பெருந்துறை போலீசில் புகாரளித்துள்ளார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து, திருப்பூர் மாவட்டம், காங்கேயத்தை சேர்ந்த செல்வராஜ் மகன் பிரகாஷ், 27, வெள்ளரி வெள்ளியை சேர்ந்த ராமசாமி மகன் கார்த்திக், 27, ஆகிய இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.