ஈரோடு, டிச. 7-
''படித்தால் தான் சமுதாயம் சமநிலை அடைய முடியும் என்ற பாணியில், தற்போதைய அரசு செயல்படுவதாக,'' சிறுபான்மை மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் கே.எஸ்.மஸ்தான் தெரிவித்தார்.
ஈரோட்டில், சர்வதேச கிறிஸ்துவ ஊழியர்கள் கூட்டமைப்பு, ஈரோடு மாவட்ட அனைத்து திருச்சபைகள் சார்பில் கிறிஸ்துமஸ் விழா நடந்தது. இதில், வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி கலந்துகொண்டு பேசுகையில், ''முதல்வரை எப்போது சந்தித்து, சிறுபான்மையினர் பற்றி பேசினாலும், 'அவர்களுக்கு கூடுதலாக உதவிகள், நலத்திட்டங்கள் வழங்குங்கள்' என, வலியுறுத்துவார்,'' என்றார்.
சிறுபான்மை மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் கே.எஸ்.மஸ்தான் பேசுகையில், ''படித்தால் தான் சமுதாயம் சமநிலை அடைய முடியும் என்பதை, கிறிஸ்துவ அமைப்புகள் உணர்த்தின. அதே பாணியில்தான் தற்போதைய அரசும் செயல்படுகிறது,'' என்றார்.
மேயர் நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ், மண்டல தலைவர் தண்டாயுதபாணி உட்பட பலர் பங்கேற்றனர்.