இந்த மூலிகை மருந்து தயாரிக்கும் ஆலையில், ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், 100 நாட்களுக்கு தினமும், 2,500 ரூபாய் ரொக்கம் அல்லது வங்கி மூலம் பணம் வழங்குவதாகவும், 100வது நாளில் முதலீடு செய்த பணம் திரும்ப தருவதாக கூறினர். தவிர, 10 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தால், 100 நாட்களுக்கு தினமும், 100 ரூபாய் வழங்குவதாகவும், 100 நாட்களுக்கு பின், முதலீடு செய்த பணத்தை திரும்ப வழங்குவதாக விளம்பரம் செய்தனர்.
இதை நம்பி, ஈரோடு, திருப்பூர், சேலம், கரூர், துாத்துக்குடி, மதுரை, கடலுார், விருதுநகர், விழுப்புரம், திண்டுக்கல், புதுச்சேரி, சென்னையை சேர்ந்த பலரும் முதலீடுகளை வங்கி மூலம் அனுப்பினர்.
குவாலிட்டி டிரேடர்ஸ் பங்குதாரர்கள், 100 நாட்களுக்கான பணத்தையும், முதலீட்டையும் திரும்ப வழங்கவில்லை. இதனால் பாதிக்கப்பட்டோர், சத்தியமங்கலம் போலீசில் புகார் செய்தனர். புகார்படி, வழக்குப்பதிவு செய்து பங்குதாரர்களை கைது செய்தனர். இவ்வழக்கு, ஈரோடு மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. பொருளாதார குற்றப்பிரிவு போலீசில், 15 பேர் புகார் செய்துள்ளனர். நுாற்றுக்கணக்கானோர், பல லட்சம் ரூபாய் ஏமாந்துள்ளனர் என தெரியவந்தது.
எனவே, குவாலிட்டி டிரேடர்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்து, பாதிக்கப்பட்ட மக்கள், ஈரோடு ஸ்டேட் பாங்க் சாலையில் உள்ள ஈரோடு மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகாரளிக்கலாம். கூடுதல் விபரம் அறிய, 88073 28868 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.