மூலிகை மருந்துக்காக முதலீடு பெற்று மோசடி: பாதிக்கப்பட்டோர் புகார் வழங்க யோசனை
Added : டிச 07, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 


ஈரோடு: சத்தியமங்கலத்தில் மூலிகை மருந்து தயாரிப்பதாக கூறி, மக்களிடம் பல லட்சம் ரூபாய் முதலீடு பெற்று மோசடி செய்த வழக்கில், பாதிக்கப்பட்டோர் புகார் வழங்க போலீசார் அழைத்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனத்துறை டெப்போ, கிழக்கு வீதியில் குவாலிட்டி டிரேடர்ஸ், ரிலிப் ெஹர்பல் புராடெக்ட் என்ற பெயரில் இரு மூலிகை மருந்து தயாரிக்கும் ஆலைகள் கடந்த, 2018, நவ., மற்றும், 2019 ஆக., ஆகிய மாதங்களில் செயல்பாட்டுக்கு வந்தது.
இதன் உரிமையாளர்கள், பங்குதாரர்களாக சத்தியமங்கலம் கெம்பநாயக்கன்பாளையம் தங்கராஜ், புளியங்கோம்பை பிரகாஷ், கோணார் நாயக்கன்பாளையம் ஆனந்தகுமார், பவானி ஆண்டிபாளையம் பிரபாகரன், சத்தி வடக்குபேட்டை பொன்னுசாமி, கெம்பநாயக்கன்பாளையம் துரைசாமி ஆகியோர் செயல்பட்டனர்.

இந்த மூலிகை மருந்து தயாரிக்கும் ஆலையில், ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், 100 நாட்களுக்கு தினமும், 2,500 ரூபாய் ரொக்கம் அல்லது வங்கி மூலம் பணம் வழங்குவதாகவும், 100வது நாளில் முதலீடு செய்த பணம் திரும்ப தருவதாக கூறினர். தவிர, 10 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தால், 100 நாட்களுக்கு தினமும், 100 ரூபாய் வழங்குவதாகவும், 100 நாட்களுக்கு பின், முதலீடு செய்த பணத்தை திரும்ப வழங்குவதாக விளம்பரம் செய்தனர்.
இதை நம்பி, ஈரோடு, திருப்பூர், சேலம், கரூர், துாத்துக்குடி, மதுரை, கடலுார், விருதுநகர், விழுப்புரம், திண்டுக்கல், புதுச்சேரி, சென்னையை சேர்ந்த பலரும் முதலீடுகளை வங்கி மூலம் அனுப்பினர்.
குவாலிட்டி டிரேடர்ஸ் பங்குதாரர்கள், 100 நாட்களுக்கான பணத்தையும், முதலீட்டையும் திரும்ப வழங்கவில்லை. இதனால் பாதிக்கப்பட்டோர், சத்தியமங்கலம் போலீசில் புகார் செய்தனர். புகார்படி, வழக்குப்பதிவு செய்து பங்குதாரர்களை கைது செய்தனர். இவ்வழக்கு, ஈரோடு மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. பொருளாதார குற்றப்பிரிவு போலீசில், 15 பேர் புகார் செய்துள்ளனர். நுாற்றுக்கணக்கானோர், பல லட்சம் ரூபாய் ஏமாந்துள்ளனர் என தெரியவந்தது.
எனவே, குவாலிட்டி டிரேடர்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்து, பாதிக்கப்பட்ட மக்கள், ஈரோடு ஸ்டேட் பாங்க் சாலையில் உள்ள ஈரோடு மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகாரளிக்கலாம். கூடுதல் விபரம் அறிய, 88073 28868 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் ஈரோடு கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X