கரூர், டிச. 7-
கார்த்திகை தீப பெருவிழாவையொட்டி, கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நேற்று சொக்கப்பனை கொளுத்தப்பட்டது-.
கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில்,
மூலவருக்கு நேற்று மாலை சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர்களால் அலங்கரிப்பட்ட தேரில் உற்சவர் கோவிலை வலம் வந்தார். பிறகு, ராஜ கோபுரத்தின் உச்சியில் தீபம்
ஏற்றப்பட்டது.
இரவு 7:00 மணிக்கு கோவில் முன் சொக்கப் பனை கொளுத்தப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர்.
அதேபோல், கரூர், சுற்று வட்டார பகுதிகளில், வீடுகளில் பொதுமக்கள் மண் விளக்குகளில் தீபம் ஏற்றி வழிபட்டனர்.
கார்த்திகை தீப திருநாளை ஒட்டி, வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில், நேற்று பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமியை வழிபட்டனர்.
லாலாப்பேட்டை
லாலாப்பேட்டை பழைய நெடுஞ்சாலையில் உள்ள செம்பொற்ஜோதீஸ்வரர் சிவன் கோவிலில் நேற்று மாலை 6:30 மணிக்கு கோவில் வளாகத்தில் சொக்கபனை கொளுத்தப்பட்டது-. முன்னதாக சிவன் மற்றும்
அம்மனுக்கு பல்வேறு அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து கோவில் வளாகத்தில் அகள் விளக்குகள் ஏற்றி வைக்கப்பட்டன. இதில் லாலாப்பேட்டை சுற்று வட்டார பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல பழைய ஜெயங்கொணடம் ஆளவந்தீஸ்வரர் கோவில், சங்கர
மலைப்பட்டி சங்கரேஸ்வரர் கோவிலிலும் கார்த்திகை தீப சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.
குளித்தலை
குளித்தலையை அடுத்த அய்யர்மலை ரெத்தினகிரீஸ்வரர் மலைக்கோவிலில் சிவாச்சாரியார்கள் ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட கொப்பரையில் கார்த்திகை தீபம் ஏற்றினர்.
ஆர்.டி.மலை அருகே விராச்சிலை ஈஸ்வரர் கோவில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, 450 லிட்டர் கொள்ளளவு கொண்ட கொப்பரையில் தீபம்
ஏற்றப்பட்டது.
இதேபோல், குளித்தலை கடம்பவனேஸ்வரர் , பேராளகுந்தாளம்மன், மேட்டுமருதுார் ஆராஅமுதீஸ்வரர், செல்லாண்டியம்மன், கள்ளை மாரியம்மன், கழுகூர், சின்ன ரெட்டிப்பட்டி, பேரூர், நச்சலுார், இனுங்கூர்,
நங்கவரம் ஆகிய பகுதிகளில் உள்ள கோவில்களில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.
இதில் அந்தந்த பகுதி பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.