கரூர், டிச. 7-
அமராவதி ஆற்றில் கரூர் அருகே, பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு நேற்று தண்ணீர் வரத்து சற்று அதிகரித்தது.
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு, நேற்று முன்தினம் காலை வினாடிக்கு, 830 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, தண்ணீர் வரத்து, 858 கன அடியாக அதிகரித்தது. 90 அடி உயரம் கொண்ட, அணையின் நீர்மட்டம், 89.41 அடியாக இருந்தது. அணையில் இருந்து ஆற்றில், 883 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் கரூர் அருகே, பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு தண்ணீர் வரத்து
அதிகரித்தது. நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு 686 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று முன் தினம் வினாடிக்கு, 522 கன அடி தண்ணீர் வந்தது.
மாயனுார் கதவணை
காவிரி ஆற்றில் மாயனுார் கதவணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு, 8,672 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 5,430 கன அடியாக தண்ணீர் வரத்து குறைந்தது.
டெல்டா பாசனத்துக்கு 4,510 கன அடி தண்ணீரும், நான்கு பாசன கிளை வாய்க்காலில் வினாடிக்கு, 920 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது.
நங்காஞ்சி அணை
திண்டுக்கல் மாவட்டம், நங்காஞ்சி அணைக்கு நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 20 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து, இரண்டு பாசன கிளை வாய்க்காலில் தலா, 10 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. அணையில் 39.34 அடிக்கு நீர் உள்ளது.
ஆத்துப்பாளையம் அணை
க.பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு, நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 12 கன அடி தண்ணீர் வந்ததது. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 26.60 அடியாக இருந்தது.
பொன்னனியாறு அணை
கடவூர் அருகே உள்ள பொன்னனியாறு அணைக்கு, நேற்று தண்ணீர் வரத்து இல்லை. 51 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 27.90 அடியாக
உள்ளது.