குளித்தலை, டிச. 7-
கடவூர் வட்டார வள மையத்துக்கு உட்பட்ட அரசு நடுநிலைப்பள்ளி, மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கான கலைத்திருவிழா போட்டி தரகம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.
மாவட்ட கல்வி அலுவலர் மணிவண்ணன் தலைமை வகித்தார்.
தரகம்பட்டி பஞ்., தலைவர் வேதவள்ளி போட்டியை தொடங்கி வைத்தார். அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அமலி டெய்சி, வட்டார கல்வி அலுவலர்கள் தர்மராஜ், செந்தமிழ்செல்வி, தரகம்பட்டி யூனியன் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வன், வட்டார வளமைய மேற்பார்வையாளர் வரதராஜ், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் மகேந்திரன் ஆகியோர் நிகழ்ச்சி குறித்து பேசினர்.
இதில் கவின் கலை, நுண்கலை போட்டிகள், நாடகம், பல குரல் பேச்சு உட்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் போட்டிகளில் பங்கேற்றனர். வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுனர்கள், ஆசிரியர்கள் போட்டிக்கான
ஏற்பாடுகளை செய்திருந்த னர்.