கரூர், டிச. 7-
கரூர் மாவட்ட தி.மு.க., சார்பில், டாக்டர் அம்பேத்கரின், 66வது நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது.
கட்சி அலுவலகத்தில் நடந்த இந்நிகழ்ச்சிக்கு மாநகர செயலாளர் கனகராஜ் தலைமை வகித்தார். அம்பேத்கர் உருவப்படத்துக்கு, மாநகராட்சி மேயர் கவிதா, துணை மேயர் தாரணி சரவணன் ஆகியோர் மலர் துாவி மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியில், மாவட்ட துணை செயலாளர் மகேஸ்வரி, தெற்கு பகுதி செயலாளர் சுப்பிரமணியன், செயற்குழு உறுப்பினர் செந்தில் உட்பட தி.மு.க., நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
கரூர் மனோகரா கார்னரில் வி.சி., தமிழ்நாடு பட்டியல் இன விடுதலை பேரவை உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர், அம்பேத்கர் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
* அரவக்குறிச்சி
அரவக்குறிச்சியில் வி.சி. சார்பில் வழக்கறிஞர் ரவிநாத் தலைமையில் அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்வில் தொகுதி துணை செயலாளர் சுரேந்தர், மாவட்ட பொருளாளர் நிலவன் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு அம்பேத்கருக்கு நினைவஞ்சலி செலுத்தினர்.