கொடிகளை அகற்றிய போலீசார்: பா.ஜ., கண்டனம்
Updated : டிச 07, 2022 | Added : டிச 07, 2022 | கருத்துகள் (6) | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Latest district News

அன்னூர்: அன்னூரில் பா.ஜ., கொடிகளை போலீசார் அகற்றியதற்கு பா.ஜ., கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பங்கேற்ற ஆர்ப்பாட்டம் அன்னூரில் நடந்தது. இதற்காக அன்னூரில், கோவை ரோட்டில், இரண்டு கி.மீ., தொலைவிற்கும், கரியாம்பாளையம், கணேசபுரம் மற்றும் குன்னத்தூரில் கொடிகள் கட்டப்பட்டிருந்தன. நேற்று முன்தினம் இரவு போலீசார் கொடிகளை அகற்றும்படி கூறினர். பா.ஜ., நிர்வாகிகள் கொடிகளை அகற்ற மாட்டோம் என்று கூறினர். அதிகாலையில் போலீசார் அன்னூரில் நடப்பட்டிருந்த 500 பா.ஜ., கொடிகளை அகற்றினர்.


மேடை அமைக்க உபகரணங்களுடன் வந்த லாரியையும் அந்த ஊழியர்களையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர். இது குறித்து பா.ஜ., கோவை வடக்கு மாவட்ட தலைவர் சங்கீதா வெளியிட்டுள்ள அறிக்கை : தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பங்கேற்கும் ஆர்ப்பாட்டத்திற்கு முறையாக போலீஸ் ஸ்டேஷனில் விண்ணப்பித்து, அனுமதியும் பெறப்பட்டது. வேண்டுமென்றே பல்வேறு இடையூறுகள் ஏற்படுத்தி நடப்பட்ட கொடிகளில் 500 கொடிகளை போலீசார் அதிகாலையில் அகற்றி உள்ளனர். மேடை அமைக்கவும் அனுமதி தர மறுத்து விட்டனர். இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. அடக்குமுறைகளை தாண்டி பா.ஜ., நிச்சயம் சாதனை படைக்கும். இவ்வாறு, அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (6)
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
07-டிச-202220:57:19 IST Report Abuse
sankaranarayanan தமிழ் நாட்டு போலீசு ஒரு கட்சியின் கைக்கூலியாக எடுபடி ஆட்களாக நடக்கக்கூடாது. நீதிமன்றங்கள் தானாகவே முன்வந்தது இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
07-டிச-202219:37:37 IST Report Abuse
r.sundaram அஹ்மதி பெற்று நடக்கவிருக்கும் கூட்டத்தை போலீஸ் தடுத்தால், நீதிமன்றங்கள் மூலம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது தான்.
Rate this:
Cancel
07-டிச-202218:40:41 IST Report Abuse
சி சொர்ணரதி சீப்பு ஒழித்து விட்டு கல்யாணத்தை நிறுத்திவிடலாம் என்று நினைப்பது மாதிரி இருக்கின்றது - காவல்துறையின் நடவடிக்கை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X