ராணிப்பேட்டை:புயல் மீட்பு பணிகள் மேற்கொள்ள அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மீட்டு 150 பேர் பல்வேறு பகுதிகளுக்கு சென்றனர்.
தென் கிழக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் எனப்படும் புயலால் தமிழகம், புதுச்சேரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதனால் ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகே தக்கோலத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்பு மையத்திலிருந்து தலா 25 பேர் கொண்ட ஆறு குழுக்களை சேர்ந்த 150 வீரர்கள் புதுச்சேரி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டனம், கடலுார், மயிலாடுதுரை, சென்னை ஆகிய மாவட்டங்களுக்கு விரைந்துள்ளனர்.
மீட்பு கருவிகளுடன் சென்றுள்ள இவர்கள் மீட்பு பணிகள் மேற்கொள்வார்கள் என அதிகாரிகள் கூறினர்.