தவறினால் மாநகராட்சி லாரியை பொது மக்கள் சிறை பிடித்து விட்டு எனக்கு தகவல் தந்தால் குப்பை கொட்டிய ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போது 300 கோடி ரூபாயில் 600 ஏரிகளை துார் வாரியதாக கணக்கு காட்டி பணத்தை எடுத்துச் சென்று விட்டனர். துார் வாரிய ஏரிகளின் பட்டியல் கேட்டேன். கடைசி வரை தரவில்லை. அனைத்து பணிகளையும் ஒருவருக்கே டெண்டர் விட்டார்கள். 250 கோடி ரூபாயை அவர்கள் எடுத்துக்கொண்டார்கள். 50 கோடி ரூபாயை டெண்டர் எடுத்தவர் எடுத்துக்கொண்டார்.
எங்கள் ஆட்சியில் அப்படி நடக்க முடியாது. 10 ஏரிகளுக்கு ஒரு காண்டிராக்ட் பணிகளை விடுகிறோம். அதில் திருப்தி இருந்தால் தான் மற்ற பணிகள் அவர்களுக்கு வழங்கப்படும். தமிழகத்தில் உள்ள நீர் நிலைகளை பாதுகாத்து விரிவுபடுத்த அரசு நடவடிக்கை எடுத்திருப்பதால், நீர் நிலைகளில் குப்பைகள் கொண்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்கள் கைது செய்யப்படுவார்கள்.
தமிழகத்தில் நீர்வளத்துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை எடுத்துள்ள ஒப்பந்ததாரர்கள் சரியாக செய்ய வேண்டும். நானே நேரில் சென்று பார்வையிட்ட பிறகு தான் அந்த பணிகளுக்கான தொகையை அதிகாரிகள் வழங்க வேண்டும்.
பொன்னை அருகே பாலாற்றில் தனியார் தொழிற்சாலை ஒன்று மலை போல குப்பைகள் குவித்துள்ளது. அந்த நிறுவனம் உடனடியாக குப்பைகளை அகற்றகாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் பேசினார். தி.மு.க., எம்.எல்.ஏ., க்கள் அணைக்கட்டு நந்தகுமார், குடியாத்தம் அமலு, ஆற்காடு ஈஸ்வரப்பன், வேலுார் மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில்குமார் பங்கேற்றனர்.