காஞ்சிபுரம்:டிசம்பர் மாதத்திற்கான குறைதீர் கூட்டத்தை காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி அறிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் தாலுகாவில் தாமல் கிராமத்திலும், வாலாஜாபாத் தாலுகாவில் வாரணவாசி, ஸ்ரீபெரும்புதுார் தாலுகாவில் செங்காடு, குன்றத்துார் தாலுகாவில் சிக்கராயபுரம், உத்திரமேரரூர் தாலுகாவில் ஒரக்காட்டுபேட்டை கிராமத்திலும், வரும் 10ம் தேதி, காலை 10:00 மணிக்கு குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் போன்றவை மேற்கொள்ளலாம்.
புதிய குடும்ப அட்டை மற்றும் நகல் அட்டைக்கும் விண்ணப்பிக்கலாம். இந்த கோரிக்கைகள் மீது உடனடி தீர்வு காணப்படும் என, கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துஉள்ளார்.