காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஓரிக்கையில் உள்ள ஸ்ரீமஹா சுவாமிகள் மணி மண்டபத்தில், குருவார சதஸ் டிரஸ்ட் மற்றும் மஹாலட்சுமி மாத்ருபூதேஸ்வர டிரஸ்ட் சார்பில், சாஸ்த்ர சம்ரக்ஷண பாடசாலை வகுப்புகள் துவங்கப்பட்டு உள்ளன.
காஞ்சிபுரம் காமகோடி பீடாதிபதி ஜகத்குரு சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆசியுடன் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை மஹா மஹோபாத்யாய பிரம்மஸ்ரீ முல்லைவாசல் கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள் மற்றும் மஹா மஹோபாத்யாய பிரம்மஸ்ரீ மணி த்ராவிட் சாஸ்திரிகள் துவக்கி வைத்தனர்.
ஏனாத்துார் ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி மஹா வித்யாலயாவின் துணைவேந்தர் பேராசிரியர் முனைவர் எஸ்.வி.ராகவன் முன்னிலை வகித்தார். இதில், 100க்கும் மேற்பட்ட வேத பாடசாலை மாணவர்கள் பங்கேற்றனர்.