காஞ்சிபுரம்:காஞ்சிபுரம், பிள்ளையார்பாளையம், புதுப்பாளையம் தெரு, தென்கோடியில் பழமையான ருத்ரகோடீஸ்வரர் கோவில் உள்ளது. கோடி ருத்ரர்கள் வழிபட்டதால், இக்கோவிலில் உள்ள மூலவர் ருத்ரகோடீஸ்வரர் என, அழைக்கப்படுகிறார்.
இக்கோவிலில், நேற்று மாலை, கார்த்திகை மாத பவுர்ணமி பூஜை விமரிசையாக நடந்தது.
இதையொட்டி, மூலவர் ருத்ரகோடீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் மற்றும் மஹா தீபாராதனை நடந்தது.
சின்ன காஞ்சிபுரம் அல்லாபாத் ஏரிக்கரை, வரதராஜபுரம் தெருவில், வரசித்தி விநாயகர் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது.
இக்கோவிலில் நேற்று மாலை வரசித்தி விநாயகருக்கும், ரேணுகா பரமேஸ்வரி அம்மனுக்கும் பவுர்ணமியையொட்டி சிறப்பு அபிஷேகம் நடந்தது.
அதை தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சலில் எழுந்தருளிய ரேணுகா பரமேஸ்வரி உற்சவம் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.