விவசாயிகள் சீரமைத்த பாசன கால்வாய்
Added : டிச 08, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Latest district News

உத்திரமேரூர்:காஞ்சிபுரம் மாவட்டத்தில் இரண்டாவது பெரிய ஏரியாக உத்திரமேரூர் ஏரி உள்ளது. இந்த ஏரி, மழைக்காலத்தில் முழுமையாக நிரம்பினால், அத்தண்ணீரைக் கொண்டு, ஏரியின் மதகுகள் வழியாக வேடபாளையம், மேனலுார், அரசாணிமங்கலம், காட்டுப்பாக்கம், காக்கநல்லுார், புலியூர், நல்லுார், கல்லமாநகர், சோமநாதபுரம் உள்ளிட்ட 18 கிராமங்களில் உள்ள 5,636 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் பெறும்.

இந்த ஆண்டு பருவ மழைக்கு ஏரி அதன் முழு கொள்ளளவில் 80 சதவீதம் நிரம்பி உள்ளதையடுத்து, ஏரி நீர் பாசன விவசாய நிலங்களில் சாகுபடிக்கான பணிகள் துவங்கப்பட்டு உள்ளன.

இந்த ஏரியில் இருந்து, 3வது மதகு வழியாக செல்லும் பாசனக் கால்வாய் மூலம் கல்லமா நகர், மல்லிகாபுரம், சோமநாதபுரம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள 60 ஏக்கர் பரப்பிலான விவசாய நிலங்கள் பாசனம் பெறுகின்றன.

இந்த கால்வாய், பல ஆண்டுகளாக துார்ந்துள்ளது. இதனால், சாகுபடி காலத்தின் போது, கடைக்கோடி விவசாய நிலங்கள் வரை, தண்ணீர் சென்றடையாத நிலை இருந்து வருகிறது.

இக்கால்வாய் துார் வார வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில், அப்பகுதி விவசாயிகள் சிலர் ஒன்றிணைந்து, இக்கால்வாய் பகுதியை, ஜே.சி.பி., இயந்திரம் கொண்டு துார்வாரும் பணி மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து, அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:

இக்கால்வாய் துார்வாருதல் குறித்து, பொதுப்பணித் துறை அதிகாரிகளிடத்தில் வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை.

தற்போது, சம்பா பருவத்திற்கான சாகுபடி துவங்க உள்ளோம். இதற்கு மேல் அதிகாரிகளை நம்பி பயன் இல்லை என்பதால், எங்களது சொந்த செலவில், ஏக்கருக்கு 500 ரூபாய் என விவசாயிகளிடத்தில் வசூலித்து ஜே.சி.பி., இயந்திரம் வாயிலாக துார்வாரி சீரமைத்து உள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X