வாலாஜாபாத்:வாலாஜாபாத் அடுத்த, கருக்குப்பேட்டை கிராமத்தில், காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சொந்தமான நஞ்சை மற்றும் புஞ்சை நிலங்கள் உள்ளன.
இதில், 40/2 புல எண் மொத்த நிலம் ஹிந்து சமய அறநிலையத் துறை கோவிலுக்கு சொந்தம் என, அப்போதைய செயல் அலுவலர் தவறுதலாக இணைய தளத்தில் பதிவேற்றம் செய்து உள்ளார்.
இதுகுறித்து, திம்மையன்பேட்டை கிராம மக்கள் புகார் அளித்தும், பிரச்னை தீர்க்கப்படவில்லை.
ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளை கண்டித்து, நேற்று, கிராம மக்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவிருந்தனர்.
நேற்று முன் தினம் வாலாஜாபாத் காவல் ஆய்வாளர் மற்றும் ஹிந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் கிராம மக்களுடன் சமரச பேச்சில் ஈடுபட்டனர்.
ஒரு வாரத்திற்குள் முடிக்கவில்லை எனில், நீங்கள் ஆர்ப்பாட்டம் நடத்தலாம் என, உறுதியளித்ததையடுத்து, நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.