புதுக்கோட்டை:திருமயம் அருகே, வெள்ளிப்பட்டி பகுதியில், கல் குவாரிகளால் அப்பகுதியில் உள்ள வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள் அவதி அடைகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் திருமயம் அருகே, வெள்ளிப்பட்டி கிராமத்தில் 20க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர்.
இந்த கிராமத்தை சுற்றிலும் பல கல் குவாரிகள் இயங்கி வருகின்றன.
இந்த கல் குவாரிகளில் பாறைகள் வெடிவைத்து தகர்க்கப்படுவதால், வெள்ளிப்பட்டி கிராமத்தில் உள்ள வீடுகள் அதிர்ந்து மேற்கூரை இடிந்து விழுந்து வருகின்றன.
இப்பகுதியில், வசித்து வரும் பொதுமக்கள் உயிர்பலி ஏற்படுமோ, என்ற அச்சத்துடனே வாழ்ந்து வருகின்றனர்.