சேலம்:மேற்கு வங்கம், ஆந்திராவில் கடத்தப்பட்ட சிறுமியரை, அவர்களது காதலர்களுடன், அந்தந்த மாநில போலீசார், சேலத்தில் மீட்டு அழைத்துச் சென்றனர்.
மேற்கு வங்க மாநிலம், பக்தி நகர் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட 17 வயது சிறுமியை, பீஹாரைச் சேர்ந்த அம்ரூல், 20, கடத்திச் சென்றதாக சிறுமியின் பெற்றோர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர்.
மொபைல் போன் பயன்பாட்டை வைத்து அவர்கள் சேலம், சூரமங்கலத்தில் மறைந்திருப்பதை கண்டுபிடித்த பக்தி நகர் போலீசார், சேலம் வந்தனர்.
சூரமங்கலம், மூலப்பிள்ளையார் கோவில் அருகே உள்ள வீட்டில், அம்ரூலுடன் சிறுமியை மீட்ட போலீசார், மேற்கு வங்கத்துக்கு நேற்று அழைத்துச் சென்றனர்.
அதேபோல, ஆந்திரா மாநிலம், சித்துாரைச் சேர்ந்த 17 வயது சிறுமியை, அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார், 26, என்பவர் கடத்தியதாக புகார் அளிக்கப்பட்டிருந்தது.
அந்த ஜோடி, ஆலமரத்துக்காட்டில் உள்ள ஒரு வீட்டில் தங்கியிருப்பதை கண்டுபிடித்த ஆந்திரா போலீசார், இருவரையும் மீட்டு அழைத்துச் சென்றனர்.