வடவள்ளி : சோமையம்பாளையம், மாங்கல்ய கார்டனை சேர்ந்தவர் சங்கர், 46; ஐஸ்கிரீம் டீலர். மனைவி மற்றும் மகனுடன் வசித்து வருகிறார். சங்கர் தனது குடும்பத்துடன், திருவண்ணாமலை கோவிலுக்கு கடந்த, 2ம் தேதி சென்றுள்ளார்.
நேற்று வீடு திரும்பியுள்ளார். அப்போது, வீட்டின் முன்பக்க கதவை சாவி கொண்டு திறந்த போது, கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது. பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது.
வீட்டின் உள்ளே சென்றபோது, பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த, எட்டு பவுன் நகை மற்றும் வெள்ளி பொருட்கள் திருடப்பட்டிருந்தது. அவர் அளித்த புகாரின்படி, வடவள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.