பீளமேடு : அன்னுாரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க, கோவை வந்த பா.ஜ., தலைவர் அண்ணாமலையுடன், அதிரடிப்படை வீரர்கள் 'செல்பி' எடுக்க ஆர்வம் காட்டினர்.
கோவை, அன்னுாரில் விவசாயிகளுக்கு ஆதரவாக பா.ஜ,, சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில தலைவர் அண்ணாமலை, விமானத்தில் நேற்று மதியம் 1:30 மணியளவில் வந்தார். தொண்டர்கள், கொடியின்றி, கோஷமின்றி அவரை சால்வை அணிவித்தும், மலர் செண்டு கொடுத்தும் வரவேற்றனர்.
இளைஞர்கள் பலர் அவருடன், 'செல்பி' எடுப்பதில் ஆர்வம் காட்டினர். அப்போது, அங்கிருந்த இரண்டு அதிரடிப்படை ஜவான்கள், அண்ணாமலை நடந்து வரும்போது, செல்பி எடுக்க முற்பட்டனர். ஆனால், சரியாக வரவில்லை.
அண்ணாமலையை அணுகி, செல்பி எடுத்துக் கொள்ள முயன்றனர். இதை கவனித்த அண்ணாமலை, அவர்களை அருகில் அழைத்து, செல்பிக்கு போஸ் கொடுத்து உதவினார். அவர்கள் நன்றி தெரிவித்துச் சென்றனர்.