சேலம் : இரும்பாலை வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட தொழில் பாதுகாப்பு படை வீரர், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கடந்த 2018 அக்., 23 முதல், சேலம் இரும்பாலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தார். நேற்று இரும்பாலை, 5வது கேட்டில் பணியில் ஈடுபட்டிருந்தார்.
நேற்று பகல் 3:10 மணிக்கு, அவர் வைத்திருந்த, 'இன்சாஸ் - 2 பி' துப்பாக்கியால், அவரது நெற்றியில் வைத்து சுட்டுக்கொண்டார்.
அவரை சக வீரர்கள் மீட்டு, சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். 3:35 மணிக்கு அவர் உயிரிழந்தார். இரும்பாலை போலீசார் விசாரிக்கின்றனர்.