மேலுார் : மேலூரில் கலைத்திருவிழா, பூமி பூஜை மற்றும் வீடற்ற ஏழைகளுக்கு வீடுகள் வழங்கும் உள்ளிட்ட திட்டங்களை வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி, கலெக்டர் அனீஷ்சேகர் துவக்கி வைத்தனர்.
அமைச்சர் பேசியதாவது:
பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு மற்றும் கலை நிகழ்ச்சிகளை நடத்த தமிழக முதல்வர் ஸ்டாலின் அதிக கவனம் செலுத்தி வருகிறார். ஜனவரியில் சென்னையில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடைபெற உள்ள விழாவில் மதுரை மாவட்டம் முதல் பரிசை பெற வேண்டும். தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம். அனைவருக்கும் வீடு வசதி திட்டத்தின் கீழ் பயனாளிகள் தேர்வில் முறைகேடு இருக்க கூடாது, என்றார்.