தஞ்சாவூர் : கும்பகோணத்தில், சர்ச்சைக்குரிய வகையில் அம்பேத்கர் படத்துடன் போஸ்டர் அச்சடித்த அச்சக உரிமையாளரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
இதற்கு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து போலீசார் அந்த போஸ்டர்களை அகற்றினர். போஸ்டரை அச்சடித்து ஒட்டிய ஹிந்து மக்கள் கட்சியின் மாநில செயலர் குருமூர்த்தி கைது செய்யப்பட்டார்.
போஸ்டரை அச்சடித்த, கும்பகோணம் உப்புக்காரத்தெருவில் அச்சகம் நடத்தி வரும், அண்ணலக்கிரஹாரம் பகுதியை சேர்ந்த மணிகண்டன், 35, என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.