மதுரை : 'அரிசி, பருப்பு, கோதுமை போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு மத்திய அரசு பட்ஜெட்டில் வரிவிலக்கு அளிக்க வேண்டும்' என மதுரை பலசரக்கு சில்லரை வணிகர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
ஜி.எஸ்.டி.,யில் பதிவு செய்யாத, ஆண்டு விற்றுவரவு ரூ.12 லட்சத்திற்கு உட்பட்ட சிறுவணிகர்களுக்கு உணவுப் பாதுகாப்பு தரநிர்ணய சட்ட பதிவுக் கட்டணம் ரூ.100. இந்த வாய்ப்பை அனைத்து சிறுவணிகர்களுக்கும் வழங்க வேண்டும். இச்சட்டத்தின் உரிமக் கட்டணத்தை குறைத்து, உரிமத்தின் கால அளவை நிதியாண்டின்படி அமைத்தால் ஆண்டுதோறும் எளிதாக உரிமத்தை புதுப்பிக்க முடியும்.
உணவுப் பொருட்களை வழங்க காகிதப்பையை பயன்படுத்துவதில் சேதமடைவது போன்று பல சிரமங்கள் உள்ளன. பாலிதீன் பைகளை பயன்படுத்துவதை தடுப்பதைவிட, 51 மைக்ரானுக்கு கீழ் உள்ள பைகளை தயாரிப்பது, விற்பதை தடை செய்ய வேண்டும். அதைவிடுத்து சிறுவியாபாரிகளிடம் ஆய்வு செய்து அபராதம் விதிப்பது வியாபாரிகளை பாதிக்கிறது.
சில்லரை வணிகர்கள் பல பகுதிகளில் பொருட்களை கொள்முதல் செய்து விற்கின்றனர். எனவே மார்க்கெட் கமிட்டி உரிமம் பெறுவதில் இருந்து அவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும். ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு உள்ளே நடக்கும் வணிகத்திற்கு மட்டுமே சந்தைக் கட்டணம் வசூலிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.