பல்லடம் : ''நான் பேட்டி தரும் அளவுக்கு என்ன இருக்கு'' என, பல்லடம் வந்த அமைச்சர் சக்கரபாணி நழுவினார்.
செய்தியாளர்கள் அவரிடம், 'பொங்கல் பரிசு குறித்து ஏதேனும் தகவல் உள்ளதா?; எதிர் கட்சியான அ.தி.மு.க.,வின் செயல்பாடுகள் எப்படி உள்ளது,' என, பல்வேறு கேள்விகளை எழுப்பினர். ''பொங்கல் பரிசு குறித்து முதல்வர் அறிவிப்பார். திருப்பூர் மாவட்டத்தில், இரண்டு அமைச்சர்கள்(சாமிநாதன், கயல்விழி) இருக்கும்போது, நான் பேட்டி தரக்கூடாது. பேட்டி தரும் அளவுக்கு என்ன உள்ளது?' என்றபடி அமைச்சர் நழுவிச்சென்றார்.
சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின், இருபக்க மத்தளம் போல் தான் அடி வாங்கி வருவதாக, அமைச்சர்களின் செயல்பாடு குறித்து சுட்டிக்காட்டி பேசியிருந்தார். இதன் காரணமாகவே, அமைச்சர் சக்கரபாணி பேட்டியளிக்க மறுத்துள்ளார்.