கண்டமங்கலம் : கண்டமங்கலம் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க., இளைஞர் அணி செயலாளர் சவரிராஜன் தலைமையில் மாற்றுக் கட்சியினர் 500 பேர் பா.ஜ., வில் இணையும் விழா கண்டமங்கலம் ஸ்ரீகீர்த்தி திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது.
விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க., இளைஞர் அணி செயலாளர் முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் சவுரிராஜன் அக்கட்சியில் இருந்து விலகி தனது ஆதரவாளர்கள் 500 பேருடன் பா.ஜ.,வில் இணையும் விழா, கண்டமங்கலம் ஸ்ரீ கீர்த்தி திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது.
விழாவிற்கு பா.ஜ., விழுப்புரம் வடக்கு மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். ஒன்றிய பொதுச்செயலாளர்கள் விஜய், ரவிச்சந்திரன், மாவட்ட இளைஞர் அணி துணைத் தலைவர் பள்ளித்தென்னல் துரை, மாவட்ட மகளிர் அணி பொதுச்செயலாளர் அருளரசிஅய்யப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கண்டமங்கலம் கிழக்கு ஒன்றிய பா.ஜ., தலைவர் வழக்கறிஞர் பிரகலாதன் வரவேற்றார்.
பா.ஜ., மாநில செயலாளர் வினோஜ் பி.செல்வம், மாநில துணை தலைவர் மு்ன்னாள் எம்.எல்.ஏ., சம்பத், மாநில செய்தி தொடர்பாளர் ஆதவன் ஆகியோர் முன்னிலையில் சவுரிராஜன் தனது ஆதரவாளர்கள் 500 பேருடன் பா.ஜ.,வில் இணைந்தார். அவருடன் தி.மு.க., பிரமுகர் புருேஷாத்தமன் தனது ஆதரவாளர்களுடன் கட்சியில் இணைந்தார். நிகழ்ச்சியில் புதுச்சேரி எம்.எல்.ஏ., அசோக்பாபு, முன்னாள் ஒன்றிய தலைவர் முருகன், சக்திவேல் மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
ஒன்றிய பொருளாளர் துரைபிரபு நன்றி கூறினார்.