அவிநாசி : அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் லட்சத்து எட்டு தீபம் ஏற்றும் திருவிழா நடந்தது.
அவிநாசி ஆன்மிக நண்பர்கள் குழு, சேக்கிழார் புனிதர் பேரவை சார்பில் கோவை சரவணம்பட்டி சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் தலைமையில் இத்திருவிழா நடைபெற்றது.
சபா மண்டபம், திருக்கல்யாண உற்சவம் மண்டபம், கனகசபை, காசி விஸ்வநாதர் கோவில், தெப்பக்குளம், 100 அடி உயர தீப ஸ்தம்பம் மற்றும் பிரகாரங்கள் உள்ளிட்ட பகுதிகளில் லட்சத்து எட்டு தீபங்களை பக்தர்கள் ஏற்றினர். சிவலிங்க வடிவம், அம்மன், வேல், மயில், யானை உள்ளிட்ட பல வடிவங்களில் தீபங்கள் ஜொலித்தன.
இதில், 1,108 லிட்டர் நல்லெண்ணெய், 20 கிலோ திரி ஆகியன தீப விளக்கிற்கு பயன்படுத்தப்பட்டது.