விழுப்புரம் : விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில், தெற்கு மாவட்ட தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் புகழேந்தி எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். மாவட்ட அைவத் தலைவர் ஜெயச்சந்திரன், மாநில மருத்துவ அணி லட்சுமணன் எம்.எல்.ஏ., மாநில விவசாய தொழிலாளர் அணி செயலாளர் அன்னியூர் சிவா, மாவட்ட பொருளாளர் ஜனகராஜ், துணை செயலாளர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில துணை பொதுச்செயலாளர் அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
கூட்டத்தில், மாநில இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் மீண்டும் தேர்வு செய்யப்பட்டதற்கு நன்றி தெரிவிப்பது, பேராசிரியர் அன்பழகன் நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு, விழுப்புரம் மற்றும் திருக்கோவிலுாரில் பொதுக்கூட்டம் நடத்துவது, விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பலரும் மாநில பொறுப்புகளில் நியமனம் செய்யப்பட்டதற்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில், ஒன்றிய செயலாளர்கள் வழக்கறிஞர் ராஜா, தெய்வசிகாமணி, மும்மூர்த்தி, கணேசன், பிரபாகரன், ரவி, ஜெயரவிதுரை, முருகவேல், தங்கம், விஸ்வநாதன், இளைஞரணி தினகரன், மாணவரணி ஸ்ரீவினோத், மாவட்ட எஸ்.சி.,-எஸ்.டி., அணி முத்துசாமி, நகர செயலாளர் சக்கரை, நகர் மன்ற சேர்மன் தமிழ்ச்செல்வி பிரபு, நகர இளைஞரணி அமைப்பாளர் மணிகண்டன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.