திருப்பூர் : தனது பெயரை பயன்படுத்தி மோசடியில் ஈடுபடும் நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ., செல்வராஜ்(தி.மு.க.,) போலீசில் புகார் அளித்தார்.
எம்.எல்.ஏ., செல்வராஜ் கூறுகையில்,''வீடு, கடை, வேலை என எந்த வேலைக்கும், எனது பெயரை பயன்படுத்தி நேரிலோ, மொபைல் போன் மூலமோ தொடர்பு கொண்டாலோ, எனக்கும் அதற்கும் சம்பந்தம் கிடையாது. இதுபோன்று யாராவது அணுகினால், என்னை தொடர்பு கொள்ளுங்கள். மக்கள் இவர்களிடம் ஏமாற வேண்டாம்,'' என்றார்.