ஓமலுார்: ''போலி விளம்பரத்தை நம்பி யாரும் ஏமாற வேண்டாம்,'' என, சேலம் விமான நிலைய இயக்குனர் ரமேஷ் எச்சரித்துள்ளார்.
சேலம் மாவட்டம் ஓமலுார் அருகே காமலாபுரத்தில் விமான நிலையம் உள்ளது. மத்திய அரசின் விமான ஆணைய கட்டுப்பாட்டில் செயல்படும் நிலையில், சேலம் விமான நிலையத்தில் வேலை உள்ளதாக கூறி வாட்ஸ் ஆப், பேஸ்புக் உள்ளிட்ட ஆன்லைன் மூலம் போலி விளம்பரம், 'உலா' வருகிறது.
இதுகுறித்து சேலம் விமான நிலைய இயக்குனர் ரமேஷ்
கூறியதாவது:
சிலர் போலியான வேலை அனுமதி கடிதத்துடன் வந்து, ஏமாற்றப்பட்டதாக கண்ணீர் வடிக்கின்றனர். அதனால் போலி விளம்பரம், விமான நிலையத்தில் வேலை எனும் ஆசை வார்த்தையை நம்பி, மக்கள் ஏமாற வேண்டாம். இதன்மூலம் பணத்தை இழக்க நேரிடும்.
'இந்திய விமான நிலைய ஆணையம், www.aai.aero எனும் வெப்சைட்' மூலம் வேலை வாய்ப்பை பற்றி அறிந்துகொண்டு அதன்படி வேலை பெற முயற்சிக்க
வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.