கோபி: ''அ.தி.மு.க., கட்சியை பொறுத்த வரை, பொதுச்செயலர் பழனிசாமியை தவிர்த்து, வேறு யாரும் எந்த பதவிக்கும் வர முடியாது,'' என, பவானி எம்.எல்.ஏ., கருப்பணன் பேசினார்.
ஈரோடு அ.தி.மு.க., புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பில்,
நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், கவுந்தப்பாடியில், நேற்று நடந்தது. அப்போது பவானி எம்.எல்.ஏ., கருப்பணன் தலைமை வகித்து பேசியதாவது:
அ.தி.மு.க., கட்சியை பொறுத்தவரையில், பொதுச்செயலர்
பழனிசாமியை தவிர்த்து, வேறு யாரும் எந்த பதவிக்கும் வர முடியாது. அவரை தவிர வேறு எவருக்கும், எந்த உரிமையும், எந்த ஆதரவும் கிடையாது. பொதுச்
செயலர் பழனிசாமி தலைமையில், செயற்குழு, பொதுக்குழு, ஒன்றிய செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏ.,க்கள் என, 96 சதவீதம் பேர் அவருக்கு ஆதரவாக உள்ளனர்.
அதில் எந்த மாற்றமும் கிடையாது. உயர்நீதிமன்றமே பழனிசாமி தான் கட்சியின் பொறுப்பாளர் என தெரிவித்துள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.