ஜனவரியில் ஜெர்மனியில் சர்வதேச ஜவுளி கண்காட்சி நம்பிக்கையுடன் காத்திருக்கும் கரூர் ஏற்றுமதியாளர்கள்
Added : டிச 08, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 



கரூர்: வரும் ஜனவரியில் ஜெர்மனியில் நடக்கும் சர்வதேச ஜவுளி கண்காட்சி மூலம் புதிய ஆர்டர்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கரூர் ஜவுளி ஏற்றுமதியாளர்கள் உள்ளனர்.
கரூர் மாவட்டத்தில் உள்ளூர் மற்றும் வெளிநாடுகளுக்கு ஜவுளி ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள், 600க்கும் மேற்பட்டவை இயங்கி வருகின்றன. இவற்றில் வீட்டு உபயோக ஜவுளி பொருட்கள் ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உட்பட பல்வேறு வெளிநாடுகளுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதன்மூலம் ஆண்டுக்கு, 6000 கோடி ரூபாய் வர்த்தகம் நடந்து வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம், ஜெர்மனி நாட்டின் பிராங்பர்ட் நகரில், உலகளாவிய வீட்டு உபயோக ஜவுளி கண்காட்சி நடப்பது வழக்கம். இதில் இந்தியா உட்பட பல நாடுகளில் இருந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏற்றுமதியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள் பங்கேற்று
வருகின்றனர்.
அதன்படி வரும் ஜன., 10 முதல், 13 வரை பிராங்பர்ட்டில் ஜவுளி கண்காட்சி நடக்கிறது. இதில், ஓரளவு ஆர்டர் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் ஜவுளி நிறுவனங்கள் உள்ளன.
இது குறித்து கரூர் ஏற்றுமதியாளர் சங்க உறுப்பினர் ஸ்டீபன் பாபு கூறியதாவது:
கடந்த ஆண்டு நுால் விலை, 100 சதவீதத்துக்கு மேல் கட்டுக்கடங்காமல் உயர்ந்து வந்தது. தற்போது அதிலிருந்து, 30 சதவீதம் வரை
குறைந்துள்ளது. இந்த ஆண்டு ஜெர்மன் சர்வதேச ஜவுளி கண்காட்சியில் ஆர்டர்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில், கடந்த ஆண்டுகளை விட தற்போது கரூரிலிருந்து, 80க்கும் மேற்பட்ட ஏற்றுமதியாளர்கள் கலந்துகொள்ள பதிவு
செய்துள்ளனர்.
இந்த கண்காட்சியில், போட்டியாளர்களான சீன நிறுவனங்கள் கலந்து கொள்ளவில்லை. பாகிஸ்தானில் பொருளாதார சூழ்நிலையால், அங்குள்ள நிறுவனங்களும் வர வாய்ப்பு குறைவு. இதுபோன்ற சாதகமான சூழ்நிலையால் வழக்கத்தை விட கூடுதலாக, 1,500 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
இதேபோல், ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக ஐரோப்பா, அமெரிக்க நாடுகளில் பொருளாதார மந்த நிலை நீடித்து வருகிறது. அந்ந நாடுகள், அத்தியாவசிய தேவை பட்டியலில் உள்ள பொருட்களுக்கு மட்டுமே செலவு செய்து
வருகின்றன.
அந்த பட்டியலில், வீட்டு உபயோக பொருட்கள் இல்லாததால், கூடுதல் ஆர்டர் கிடைக்குமா? என்பது சந்தேகமாக உள்ளது. இருப்பினும், 'தை பிறந்தால் வழி பிறக்கும்' என்ற நம்பிக்கையுடன் கண்காட்சிக்கு செல்கிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் திருச்சி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X