நாமக்கல்லில் பருத்தி ஏலம்
ரூ.48 லட்சத்துக்கு விற்பனை
நாமக்கல், டிச. 8-
நாமக்கல் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில், செவ்வாய்க்கிழமை பருத்தி ஏலம் நடந்தது.
இதில், நாமக்கல், நாமகிரிப்பேட்டை, ராசிபுரம், வேலகவுண்டம்பட்டி, புதுச்சத்திரம், எருமப்பட்டி, பவித்திரம், சேந்தமங்கலம் உள்பட, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, 1,550 மூட்டை பருத்திகளை விவசாயிகள் கொண்டு வந்தனர். அதில், ஆர்.சி.ஹெச்., ரக பருத்தி, குவிண்டால் குறைந்தபட்சம், 5,999 ரூபாய்க்கும், அதிகபட்சம், 9,769 ரூபாய்க்கும், கொட்டுரக பருத்தி, குவிண்டால் ஒன்றுக்கு குறைந்த பட்சம், 3,499 ரூபாய்க்கும், அதிகபட்சம், 6,199 ரூபாய்க்கும் ஏலம் போய், மொத்தம், 1,550 மூட்டை பருத்தி, 48 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது. இந்த பருத்தி மூட்டையை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, சேலம், கொங்கணாபுரம், கோவை, அவினாசி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த வியாபாரிகள் ஏலம் எடுத்துச் சென்றனர்.
செக்யூரிட்டி தற்கொலை
பள்ளிபாளையம், டிச. 8-
பள்ளிபாளையம் அருகே வெப்படை அடுத்த காமராஜ் நகரைச் சேர்ந்தவர் செந்தில்குமார், 45. இவர் தனியார் வங்கியில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வந்தார். கடந்த சில மாதங்களாக வேலைக்கு செல்லவில்லை. இதனால் விரக்தி அடைந்த நிலையில் இருந் அவர், நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் வெப்படை போலீசார் விசாரிக்கின்றனர்.
11ம் தேதி நீலகண்டேஸ்வரர்
கோவிலில் கும்பாபிேஷகம்
எலச்சிபாளையம், டிச. 8-
எலச்சிபாளையம் அடுத்த அகரம் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள நீலகண்டேஸ்வர சுவாமி, அமிர்தவல்லி மங்களாம்பிகை கோவிலில், வரும், 11ம் தேதி கும்பாபிேஷகம் நடக்க இருக்கிறது. இதற்காக கடந்த நவ., 20ல், முகூர்த்தகால் பூஜைகள் நடந்தது. 30ல் யாகசாலை கட்ட பூஜைகள் நடந்தது.
நாளை விக்னேஸ்வர பூஜை, தீர்த்த சங்கிரஹணம், ரக்ஷா பந்தனம், முதற்கால யாகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும், 10ம் தேதி யாகசாலை பிரவேசம், இரண்டாம் மற்றும் மூன்றாம்கால யாகங்கள் நடக்க உள்ளது. 11ம் தேதி அதிகாலை, 4 மணிக்கு, நான்காம் கால யாகமும், 8 மணிக்கு மங்கள வாத்தியங்களுடன் கடங்கள் புறப்பாடும், 8.30 முதல், 9 மணிக்குள், மஹா கும்பாபிேஷகமும் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
அரசு பள்ளி வளாகத்தில் மழைநீர்
தடுக்க பராமரிப்பு பணி துவக்கம்
பள்ளிபாளையம், டிச. 8-
கொக்கராயன்பேட்டை அரசு பள்ளி வளாகத்தில் மழைநீர் செல்வதை தடுக்க, பள்ளியின் அருகே செல்லும் ஓடையை துார்வாரும் பணிகள் நடக்கிறது.
பள்ளிபாளையம் அருகே கொக்கராயன்பேட்டை சுற்றுவட்டாரத்தில் கன மழை பெய்தால், அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மழைநீர் புகுந்து விடும். கடந்த, மூன்று மாதங்களுக்கு முன்பு பெய்த மழையால், இந்த பள்ளி வளாகம் முழுவதும் தண்ணீர் புகுந்து, இடுப்பளவு தண்ணீர், குளம்போல தேங்கியது. மேலும் பள்ளியை சுற்றிலும் தண்ணீர் ஆறாக செல்கிறது. அப்போது பள்ளிக்கு இரண்டு நாள் விடுமுறையும் அளிக்கப்பட்டு விட்டது. ஒவ்வொரு முறையும் கனமழை பெய்தால், பள்ளி வளாகத்தில் தண்ணீர் புகுந்து விடும்.
கடந்த மாதம் திருச்செங்கோடு எம்.எல்.ஏ., ஈஸ்வரன் நேரில் சென்று, பள்ளி வளாகம் மற்றும் வெளிபுறம், மழைநீர் செல்லும் நீர் வழித்தடத்தை ஆய்வு செய்தார். பின்னர் பொதுப்பணித்துறை அதிகாரியிடம், மழைநீர் செல்ல வடிகால் அமைக்க திட்ட மதிப்பீடு தயார் செய்ய வேண்டும் என கேட்டு கொண்டார். இந்நிலையில், நேற்று பள்ளி பின்புறத்தில் செல்லும் ஓடையில் வளர்ந்துள்ள முட்புதர், அடைப்புகள், பொக்லைன் மூலம் அகற்றப்பட்டு, மழைநீர் சீராக செல்லும் வகையில் பணிகள் நடந்து வருகிறது.
தனியார் பஸ்சில் 'சிசிடிவி'யை
சேதப்படுத்தியவர்கள் மீது புகார்
சேந்தமங்கலம், டிச. 8-
நாமக்கல்லில் இருந்து தனியார் பஸ்ஸை, ராசிபுரம் நோக்கி டிரைவர் சின்னதம்பி ஓட்டி வந்தார். பஸ்சில் வந்த ஈச்சம்பட்டி அருந்ததியர் தெருவைச் சேர்ந்த காந்திசெல்வன். 21, அதே பகுதியைச் சேர்ந்த, 17, வயது மாணவர் ஆகியோர், பஸ்சின் படிக்கட்டில் அமர்ந்து வந்துள்ளனர். இருவரையும், இருக்கையில் உட்காருமாறு
கண்டக்டர் கூறி உள்ளர்.
இதனால் ஆத்திரம் அடைந்த, இருவரும், பேளுக்குறிச்சி பஸ்
ஸ்டாண்டில் பஸ் நின்றதும், பஸ்சில் இருந்த கண்காணிப்பு கேமராவை உடைத்து, சேதப்படுத்தி உள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில், பேளுக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து, காந்திசெல்வன், மாணவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காணாமல் போன முதியவர்
வாய்க்காலில் சடலமாக மீட்பு
மோகனுார், டிச. 8-
மோகனுார் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி ரத்தினம், 85. இவரது மனைவி மாரியாயி. 56. இவர்களுக்கு, மூன்று மகன்கள் உள்ளனர். அதில், கடைசி மகன், 20 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார்.
கடந்த, 3ம் தேதி இரவு, 8:00 மணிக்கு வெளியே சென்ற ரத்தினம், மீண்டும் வீடு திரும்பவில்லை. மனைவி மாரியாயி, மகன் செந்தில்குமார், 47, ஆகியோர், பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இந்நிலையில், நேற்று காலை, 7:30 மணிக்கு, காட்டுப்புத்துார் சாலை, சுண்டாக்கா செல்லாண்டியம்மன் கோவில் அருகில் உள்ள வாய்க்காலில், ரத்தினம், உடல் அழுகிய நிலையில் பிணமாக மிதந்து கொண்டிருந்தார். சம்பவ இடத்துக்கு வந்த, நாமக்கல் தீயணைப்பு படையினர், அவரது உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக, மோகனுார் போலீசார்
விசாரிக்கின்றனர்.
அர்ஜுன் சம்பத் மீது
தமிழக அரசு வழக்கு
கோவை, டிச. 8-
சமூக வலைதளங்களில் அவதுாறு கருத்து பரப்பியதாக கூறி, ஹிந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் உட்பட இருவர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். ஹிந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத், சமூகவலைதள பக்கத்தில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகளை தெரிவித்திருந்தார். அதற்கு பதில் அளித்த சென்னையை சேர்ந்த ரஹீம் என்பவரும் சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களை தெரிவித்திருந்தார். இதையடுத்து, இருவர் மீதும், ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
விபத்தில் படுகாயம்
பெண் பரிதாப பலி
மோகனுார், டிச. 8-
மோகனுார் அடுத்த ஆரியூரைச் சேர்ந்த சுப்ரமணி மனைவி காமாட்சி, 48. இவர், கடந்த, ஒன்றாம் தேதி, தனது மகன் தர்ஷனுடன், 23, 'டிவிஎஸ் ரெய்டர்' பைக்கில், மோகனுார் சென்றுவிட்டு, இரவு, 7:00 மணிக்கு, ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
மோகனுார்-நாமக்கல் சாலை, தோப்பூர் அருகே சென்றபோது, எதிரே வந்த வாகனத்தின் மீது மோதாமல் இருக்க, சாலையோரம் பைக்கை ஒதுக்கியபோது, நிலை தடுமாறி விழுந்துள்ளனர். காமாட்சியும், அவரது மகனும் கீழே விழுந்து காயம் அடைந்தனர். இருவரும், கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி, காமாட்சி, நேற்று காலை, 10:00 மணிக்கு உயிரிழந்தார். சம்பவம் குறித்து மோகனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவிலில்
சொக்கப்பனை கொளுத்தி வழிபாடு
திருச்செங்கோடு, டிச. 8-
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவிலில் கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு, சொக்கப்பனை
கொளுத்தப்பட்டது.
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவிலில், அர்த்தநாரீஸ்வரர், செங்கோட்டுவேலவர், ஆதிகேசவபெருமாள் கோவில்கள் உள்ளன. இங்கு கார்த்திகை மாதம், கார்த்திகை தீபவிழா கொண்டாடப்படுவது வழக்கம். இதையொட்டி நேற்று அர்த்தநாரீஸ்வரர், செங்கோட்டுவேலவர், ஆதிகேசவபெருமாள் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்து, அர்த்த
நாரீஸ்வரர் மற்றும் ஆதிகேசவபெருமாள் சுவாமிகள் சொக்கப்
பனை கொளுத்தபட்டது. இதில், சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். தீப திருவிழாவை முன்னிட்டு, அர்த்தநாரீஸ்வரர், ஸ்ரீதேவி, பூமிதேவி சமேத ஆதிகேசவபெருமாள் பிரகார
வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாளித்தனர்.
மாவட்டத்துக்கு ரூ.96.83 லட்சம்
கொடி நாள் நிதி இலக்கு
கரூர், டிச. 8-
கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ராணுவ வீரர் கொடி நாள் நிதி சேகரிப்பை கலெக்டர் பிரபுசங்கர் தொடங்கி வைத்தார்.
அதை தொடர்ந்து அவர் கூறியதாவது:
நமது நாட்டின் பாதுகாப்பு பணிக்காக அரும் பணியாற்றிய முன்னாள் ராணுவ வீரர்கள், போரில் வீரமரணம், காயமடைந்த வீரர்களின் சேவையை போற்றும் வகையில் கொடிநாள் அனுசரிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு கொடி நாள் நிதியாக நிர்ணயிக்கப்பட்ட இலக்கு 91.67 லட்சம் ரூபாய் ஆகும். அதில் இலக்கைவிட அதிகமாக, 92 லட்சம் ரூபாய் சேகரிக்கப்பட்டது. நடப்பு ஆண்டில் இலக்காக, 96.83 லட்சம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இலக்கை விட கூடுதலாக நிதி சேகரிக்க முயற்சி மேற்கொள்ளப்படும். ராணுவ வீரர்கள் எல்லையில் பாதுகாப்பு பணியில் இருப்பதால் தான் நாம்
நிம்மதியாக உறங்குகிறோம். அவர்களுக்கு எந்தவிதமான கோரிக்கை இருந்தாலும், முன்னுரிமை அடிப்படையில் தனி கவனம் செலுத்தி மாவட்ட நிர்வாகம் துணையாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில், டி.ஆர்.ஓ., லியாகத், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சிறுசேமிப்பு) லட்சுமி, சப் கலெக்டர் சைபுதீன், முன்னாள் ராணுவ வீரர் நல அலுவலக அமைப்பாளர் வீரபத்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.