புயல் மற்றும் மழை காரணமாக ஏற்படக்கூடிய பாதிப்புகளை உடனடியாக அகற்றி இயல்பு நிலை ஏற்படுத்திட ஏதுவாக ஜேசிபி 34, ஜெனரேட்டர்கள் 7, பவர்சா 22, ஹிட்டாச்சி 10, மணல் மூட்டைகள் 26870, மரம் அறுக்கும் கருவிகள், சவுக்கு கம்பங்கள் 23065, பிளிச்சிங் பவுடர் 4700 கிலோ ஆகியன் போதிய அளவில் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளார்கள்.
பொதுமக்கள் புயல் மழை காலங்களில் பாதுகாப்பாக இருக்கவும், அரசின் எச்சரிக்கைகளை முழுமையாக கடைபிடித்து நடந்திடவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள். மேலும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு தயார் நிலையில் உள்ளது என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது எனவும்,. மாலை கனமழை துவங்கும் என எதிர்பார்க்கபடுவதால் பொதுமக்கள் தேவையின்றி வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம், நீர்நிலைகளுக்கு அருகில் செல்ல வேண்டாம் என மாவட்ட கலெக்டர் லலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.