திருநெல்வேலி:திருநெல்வேலி மத்திய சிறையில் கைதிக்கு மொபைல் போன் வாங்கிக் கொடுத்த சிறை வார்டன் அருண்பாண்டியன், 42, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
திருநெல்வேலி மத்திய சிறையில் சமீபத்தில் சிறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் கைதிகள் பயன்படுத்திய மொபைல் போன் பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில் லிட்டில் ஜான் என்ற கைதிக்கு உறவினர்களிடம் இருந்து அந்த மொபைல் போனை வாங்கி கொடுத்தது தெரிந்தது.
இந்த முறைகேட்டிற்கு உடந்தையாக இருந்த சிறை வார்டன் அருண்பாண்டியனை சிறைத்துறை டி.ஐ.ஜி., பழனி நேற்று முன்தினம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.