கடலுார் : கடலுார் அரிஸ்டோ பப்ளிக் பள்ளி மாணவ, மாணவிகள், தென் மண்டல அளவிலான ஜூடோ போட்டியில் வென்றனர்.
திருப்பூரில் நடந்த தென் மண்டல அளவிலான ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டியில், கடலுார் அரிஸ்டோ பப்ளிக் பள்ளி பங்கேற்றது. இதில், 6ம் வகுப்பு மாணவி ஸ்ரீபிரகல்நாயகி தங்கப் பதக்கமும், மாணவி ஹாசினி வெண்கலப் பதக்கமும் பெற்றனர்.
ஆண்கள் பிரிவில் ஸ்ரீ கணேஷ், ஜஷ்வா வெள்ளிப் பதக்கமும், தானேஷ் அஷ்வந்த், தணிகேஸ்வரன், காரிகன், ரித்தீஷ் ஆகியோர் வெண்கலப் பதக்கமும் பெற்றனர்.
போட்டியில் வென்ற மாணவ, மாணவிகளையும், ஜூடோ பயிற்சியாளர் ராஜசேகரனையும், பள்ளியின் தலைவர் சிவக்குமார், லட்சுமி சிவக்குமார், முதல்வர் மதுர பிரசாத் பாண்டே ஆகியோர் பாராட்டினர்.