திட்டக்குடி : திட்டக்குடி அடுத்த கோழியூரில் சாலையின் நடுவில் உள்ள மின் கம்பத்தை மாற்றியமைக்க கோரி, ஒப்பாரி வைக்கும் போராட்டம் நடந்தது.
நகர பா.ஜ., தலைவர் பூமிநாதன் தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட செயலாளர்கள் சுரேஷ், பெரியசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ராஜா, முருகேசன், நிர்வாகிகள் அய்யப்பன், அருண், மணிவண்ணன், கோவிந்த், ராஜராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சாலையின் நடுவில் இடையூறாக உள்ள மின் கம்பத்திற்கு மாலை அணிவித்து, பெண்கள் ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நகராட்சி, மின் வாரிய நிர்வாகம் சார்பில், விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து, போராட்டம் வாபஸ் பெறப் பட்டது.