புதுச்சேரி : புதுச்சேரி புதிய பஸ் நிலையம் அருகே கள்ளசந்தையில் மதுபாட்டில்கள் விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
உருளையன்பேட்டை இன்ஸ்பெக்டர் பாபுஜி, சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு பஸ் நிலையத்தில் ரோந்து சென்றனர். அப்போது, அய்யனார் கோவில் அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த வாலிபரை பிடித்து சோதனை செய்தனர்.
அவர் 20 குவார்ட்டர் மது பாட்டில்கள் வைத்திருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். விசாரணையில், உருளையன்பேட்டை, முருகன்கோவில் தெருவை சேர்ந்த கோபாலன் மகன் வடிவு (எ) வடிவழகன்,27; என்பதும், மதுபாட்டில்களை கள்ள சந்தையில் சுற்றுலா பயணிகளுக்கு விற்றது தெரிய வந்தது. அதன் பேரில் போலீசார், வடிவழகனை கலால் துறையினரிடம் ஒப்படைத்தனர்.