கோவை:கலஷா பைன் ஜுவல்ஸ் சார்பில், கைவினை தங்க நகை கண்காட்சி, அவிநாசி சாலை, 'தி ரெசிடென்ஸி ஓட்டலில்' நாளை வரை நடக்கிறது.
இக்கண்காட்சியில், தங்கம், வைரம், ஜடாவு, வெள்ளி நகைகள் அனைத்து டிசைன்களிலும் இடம் பெற்றுள்ளன. கண்காட்சிக்கென பிரத்யேகமாக வடிவைமக்கப்பட்ட, கலை நயமிக்க நகைகள், பழமையும், கலாசாரமும் நிறைந்த புதுமையான நகைகளும் இடம் பெற்றுள்ளன.
கலஷா இயக்குனர் அபிஷேக் சந்தா கூறுகையில், ''தனித்துவமிக்க இந்த நகைகள், மணப்பெண்களுக்கு அழகு தருவதாக அமையும். அணியும் மணப்பெண், ஒரு ராணியை போன்று தோற்றம் தரும் பாரம்பரிய வடிவமைப்புகளுடன், பல்வேறு வகையான நகைகள், கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன," என்றார்.
கண்காட்சியை, சென்னை தீபா காஸ் ஏஜன்சீஸ் பங்குதாரர் சுகந்தி துவக்கிவைத்தார்.
திருப்பூர் ஜவுளி தொழில் முனைவோர் தீப்தி பியுஷ் சங்கை, சபிதா வெங்கடேசன், கதிர் கல்வி நிறுவனங்களின் செயலாளர் லாவண்யா, நெசவு பிராண்ட் இயக்குனர் உமா பங்கேற்றனர்.