திருப்பூர்:முத்துப்புதுார் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில், லயன்ஸ் கிளப் ஆப் திருப்பூர் சார்பில் புதிய வகுப்பறை திறப்பு விழா நேற்று நடந்தது.
லயன்ஸ் கிளப் 324ன் கல்வி அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் மெஜஸ்டிக் கந்தசாமி கட்டடத்தை திறந்து வைத்தார். லயன்ஸ் கிளப் முதல் துறை கவர்னர் ஜெயசேகரன், முன்னாள் கவர்னர் ஆறுமுகம் மணி, ஆலோசகர் ரகுபதி, ரத்தினசாமி, சத்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவுன்சிலர் கண்ணப்பன், அ.தி.மு.க., வார்டு செயலாளர் மயூரநாதன் ஆகியோர் பங்கேற்றனர்.
பள்ளி தலைமை ஆசிரியை அன்பு செல்வி, பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் மூர்த்தி, திருப்பூர் அரிமா சங்கத்தை சேர்ந்த அய்யாவு ஆகியோர் விழாவை ஒருங்கிணைத்து நடத்தினர். முருகேசன், சிவகாமி அம்மாள் ஆகியோர் நினைவாக ஸ்ரீ ஐயப்பா லேபிள் கம்பெனி நிறுவனர் பாலாஜி - ---லதா தம்பதியர், இக்கட்டடத்திற்காக, 4 லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளனர். தொடர்ந்து ஸ்மார்ட் வகுப்பறை அமைக்க ஏற்பாடு செய்யப்படும் என்று உறுதியளித்துள்ளனர்.