ஸ்ரீபெரும்புதுார்:சுங்குவார்சத்திரம் அருகே மகரிஷி பன்னாட்டு உறைவிடப் பள்ளியில், தென்மண்டல சி.பி.எஸ்.இ., பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்கும் கால்பந்து போட்டி நேற்று துவங்கியது.
சுங்குவார்சத்திரம் அருகே மகரிஷி பன்னாட்டு உறைவிடப் பள்ளி வளாகத்தில், தென் மண்டல சி.பி.எஸ்.இ., கிளஸ்டர்- 6 நடத்தும், 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான மூன்று நாள் கால்பந்து போட்டி துவங்கியது.
இதில், தென் மண்டலத்தில் இருந்து 220 சி.பி.எஸ்.இ., பள்ளிகளை சேர்ந்த 3,250 மாணவர்கள் பங்கேற்கின்றனர்.
இதன் துவக்க விழாவில் தமிழ்நாடு கால்பந்து பயிற்றுனர், ஆசிய கால்பந்து கூட்டமைப்பு மற்றும் கல்வியாளருமான பார்த்தசாரதி துளசி துவக்கி வைத்தார்.
சி.பி.எஸ்.இ., பார்வையாளர் செந்தில்குமார், சி.பி.எஸ்.இ., கால்பந்து இணை ஒருங்கிணைப்பாளர் முத்துப்பாண்டி, மகரிஷி பள்ளிக்குழுமத்தின் இயக்குனர் நீலகண்டபிள்ளை, பள்ளியின் பொறுப்பாளர் லோகநாதன், முதல்வர் சாருமதி, முதன்மை துணை முதல்வர் லதா, துணை முதல்வர் ராஜகுமார், இணை முதல்வர் ஈஸ்வர் ஆகியோர் பங்கேற்றனர்.