சிங்கபெருமாள் கோவிலில் காதல் ஜோடி தற்கொலை?
Added : டிச 09, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Latest district News

செங்கல்பட்டு:சிங்கபெருமாள் கோவில் - மறைமலை நகர் ரயில்வே பாதை அருகில், ஆண், பெண் என இருவர் ரயிலில் அடிபட்டு, நேற்று முன்தினம் நள்ளிரவு இறந்து கிடந்தனர்.

தகவலறிந்து வந்த தாம்பரம் ரயில்வே போலீசார், சடலங்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு, செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்த கபடி வீரரான அலெக்ஸ், 24, என்பவரும், துாத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஷெர்லின், 20, என்பவரும், மறைமலை நகர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர்.

இருவரும் கடந்த எட்டு மாதமாக நெருங்கி பழகி வந்துள்ளனர். இவர்கள், அடிக்கடி இரவு நேரங்களில், ரயில்வே பாதையையொட்டி கடந்து செல்லும் பாதையில் அமர்ந்து பேசுவது வழக்கம்.

இந்நிலையில், சிங்கபெருமாள் கோவில் - மறைமலை நகர் ரயில்வே பாதையில் பேசிக்கொண்டிருந்த இவர்கள், ரயில் சென்ற போது, கண்ணிமைக்கும் நேரத்தில் ரயிலில் அடிபட்டு இறந்தனர் என்பது, முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

இதுகுறித்து, ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து, தற்கொலை செய்தனரா அல்லது விபத்தா என விசாரித்து வருகின்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X