தூத்துக்குடி:உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு என போலி ஆவணம் மூலம் 45 சென்ட் நிலம் மோசடி செய்த தந்தை மகனுக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து துாத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
தூத்துக்குடி மாவட்டம் தட்டப்பாறை அருகே வடக்குசிலுக்கன்பட்டியைச் சேர்ந்தவர் ரங்கசாமி. இவருக்கு சொந்தமான 45 சென்ட் நிலத்தை அவரது உறவினர்களான சீனி செல்வராஜ் 65 மகன் லட்சுமணகுமார் 29 ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு வழங்கியது போல போலியான ஆவணம் மூலம் மோசடி செய்தனர்.
ரங்கசாமி புகாரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கை விசாரித்த தூத்துக்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் தந்தை மகனுக்கு தலா 6 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.