கோவை சிறையில் சிக்கியது 'போன்' கைதிகளிடம் தொடர் விசாரணை | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
கோவை சிறையில் சிக்கியது 'போன்' கைதிகளிடம் தொடர் விசாரணை
Added : டிச 09, 2022 | |
Advertisement
 

கோவை:கோவை மத்திய சிறையில் மொபைல் போன் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக உயர் பாதுகாப்பு செல்களில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளிடம் விசாரணை நடக்கிறது.

கோவையில், 1998ல் நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட குற்றவாளிகள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அடைக்கப்பட்டுள்ள உயர் பாதுகாப்பு செல்களில் கண்காணிப்பும் அதிகம். அங்கு அடைக்கப்பட்டுள்ள கைதிகள் சிலர் மொபைல் போன் பயன்படுத்துவது சிறை அதிகாரிகளின் ஆய்வில் தெரியவந்தது.

இதையடுத்து நேற்று மதியம் அங்கு திடீர் சோதனை நடத்திய சிறை அதிகாரிகள் குழுவினர், கைதிகளின் செல்லில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மொபைல் போன் ஒன்றை பறிமுதல் செய்தனர். சிறைக்குள் மொபைல் போன் கொண்டு செல்லப்பட்டது எப்படி, அதை பயன்படுத்தியவர்கள் யார், காவலர்கள் உதவி செய்தார்களா என்று போலீஸ் மற்றும் சிறைத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று இரவும் உயர் பாதுகாப்பு கைதிகள் அடைக்கப்பட்டுள்ள செல்களில் சோதனை நடத்தப்பட்டது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X