ஊட்டி;நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும்,பா.ஜ., தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
குஜராத் சட்டசபை தேர்தலில் ஆளும் பா.ஜ., மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது.
இதை கொண்டாடும் விதமாக, நீலகிரி பா.ஜ., சார்பில், மாவட்ட தலைவர் மோகன்ராஜ் தலைமையில், நகர செயலாளர் பிரவீண், பரமேஷ்வரன் ஆகியோர் தலைமையில், ஊட்டி காபி ஹவுஸ் சந்திப்பில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ந்தனர். இதேபோல, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், பா.ஜ., தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.