மதுரை---மதுரை சவுராஷ்டிரா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட கலைத்திருவிழா போட்டிகள் நடந்தன.
மதுரை மாவட்ட கல்வி அலுவலர் பொன்விஜயா தலைமை வகித்து துவக்கி வைத்தார். பள்ளித் தலைமை ஆசிரியர் சீனிவாசன் வரவேற்றார். அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சின்னத்துரை (பாறைபத்தி), சிவகாமி (திருப்பரங்குன்றம்), மீனாட்சி (மதுரை மாநகராட்சி), தென்கரைமுத்துப்பிள்ளை (வேடர்புளியங்குளம்), கோமதி (சாமநத்தம்) விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
வட்டார கல்வி அலுவலர்கள் கென்னடி, பேபி, நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் ரமேஷ்பாபு, காசிநாதன், வட்டார வளமைய மேற்பார்வையாளர் திலகவதி உட்பட பலர் பங்கேற்றனர்.இல்லந்தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர் ஜஸ்டின்திரவியம் தொகுத்து வழங்கினார். திரளான என்.எஸ்.எஸ்., மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.