சிறை காவலர்களின் சீருடையில் 'கேமரா': கைதிகளை கண்காணிக்க புது திட்டம்
Updated : டிச 09, 2022 | Added : டிச 09, 2022 | கருத்துகள் (10) | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

கோவை: சிறைக்கைதிகளை நேரலையில் கண்காணிப்பதற்காக காவலர்களின் சட்டையில் கேமரா அணியும் திட்டம், தமிழகத்தில் 10 சிறைகளில் அமல் செய்யப்பட்டுள்ளது.

சிறைகளில் உயர் பாதுகாப்பு செல்களில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளை கண்காணிப்பதில் பல்வேறு பிரச்னைகள் இருப்பது உயர் அதிகாரிகள் ஆய்வில் தெரியவந்தது. சிறைகளில் நடக்கும் விதிமீறல்கள், கைதிகளின் அத்துமீறிய செயல்கள் வெளியில் தெரியாமல் மூடி மறைக்கப்படுவது தொடர்கதையாக இருந்து வருகிறது.latest tamil newsஇதற்கு முடிவு கட்டும் நோக்கத்துடன் தமிழக சிறைத்துறை சார்பில் காவலர்கள் உடையில் அணியும் வகையிலான, 50 நவீன கேமராக்கள், 46 லட்சம் ரூபாயில் வாங்கப்பட்டுள்ளன. இந்த கேமராக்கள், 9 மத்திய சிறைகள் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட சிறையில் பணியாற்றும் காவலர்களுக்கு வழங்கப்பட உள்ளன.

நேற்று சென்னை புழல் மத்திய சிறை காவலர்களுக்கு கேமரா வழங்கப்பட்டது. இன்னும் ஒரு சில நாட்களில் அனைத்து மத்திய சிறைகளிலும் காவலர்களுக்கு கேமரா வழங்கப்பட உள்ளது. உயர் பாதுகாப்பு கொண்ட செல்களில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளை கண்காணிப்பதற்கு செல்லும் காவலர்கள், இந்த கேமராக்களை அணிந்திருப்பர்.

இந்த கேமராக்களில் படம் பிடிக்கப்படும் வீடியோ காட்சிகளை, சிறையின் தலைமையகத்தில் இருக்கும் கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடி உயர் அதிகாரிகள் கண்காணிக்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (10)
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
09-டிச-202211:55:48 IST Report Abuse
அசோக்ராஜ் 24 மணி நேரமும் வெப்ஸைட்டில் பப்ளிக்காக லைவ் ரிலே செய்யணும். ஒரு ஊழலும் நடக்காது. கைதி ஜெயிலர் இரண்டு தரப்பும் வரி கட்டும் மக்களுக்கு பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள்.
Rate this:
Cancel
rama adhavan - chennai,இந்தியா
09-டிச-202211:37:46 IST Report Abuse
rama adhavan Has to fix cameras at jail entrances, visitors screening places, jail superiors rooms, kitchens, jail offices,to elimate corruption in jails. All these plaaces need monitoring constantly from I G, Jail office.
Rate this:
Cancel
Mali - pune,ஐக்கிய அரபு நாடுகள்
09-டிச-202211:35:26 IST Report Abuse
Mali 50 நவீன கேமராக்கள், 46 லட்சம் ரூபாயில் வாங்கப்பட்டுள்ளன, அப்படினா ஒரு கேமரா 92,000/- ரூபாய். இதே கேமரா பிலிப்கார்ட், அமேசான் 8,000/- ரூபாய்க்கு வாங்கலாம், ஆக 38,000/ விடியலுக்கு, கரூர் கம்பெனிக்கு வரவு.. மக்களுக்கு நாமம் .
Rate this:
Senthoora - Sydney,ஆஸ்திரேலியா
09-டிச-202215:46:05 IST Report Abuse
Senthooraஆஸ்திரேலியா போலீசார் பாவிக்கும் BODY CAMERA இந்திய மதிப்பில் 8000 ரூபாய் தான், நல்லா வச்சு செய்யிறாங்க....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X