கோவை கார் குண்டு வெடிப்பு: 'வாட்ஸ் ஆப்' தகவல் அழித்தது அம்பலம்
Updated : டிச 09, 2022 | Added : டிச 09, 2022 | கருத்துகள் (27) | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

கோவை: கோவை கார் குண்டு வெடிப்பில் கைது செய்யப்பட்டுள்ள குன்னுார் ஆட்டோ டிரைவர் உமர் பாரூக், சம்பவம் நடந்ததும், 'வாட்ஸ் ஆப்' தகவல் பரிமாற்றத்தை அழித்தது என்.ஐ.ஏ., விசாரணையில் தெரியவந்துள்ளது.



latest tamil news



கோவை, கோட்டை ஈஸ்வரன் கோவில் முன் அக்., 23ல் நடந்த கார் குண்டு வெடிப்பில் ஐ.எஸ்., பயங்கரவாதி ஜமேஷா முபீன், 29, பலியானார்.

விசாரணையில், கூட்டாளிகளுடன் சேர்ந்து கோவில்கள், அரசு அலுவலகங்களில் குண்டு வைக்கவும், தற்கொலைப்படை தாக்குதல் நடத்தவும் ஜமேஷா முபீன் திட்டமிட்டது தெரியவந்தது.

மாநகர போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், முபீன் உறவினர்கள் இருவர் உட்பட, ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு என்.ஐ.ஏ., தனிப்படை விசாரணைக்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து, போத்தனுாரைச் சேர்ந்த முகமது தவுபீக், 25, நீலகிரி மாவட்டம், குன்னுாரைச் சேர்ந்த உமர் பாரூக், 39, உக்கடத்தைச் சேர்ந்த பெரோஸ் கான், 28, ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
என்.ஐ.ஏ., விசாரணையில், முதல் கட்டமாக கார் குண்டு வெடிப்பில் பலியான ஜமேஷா முபீன், மொபைல் போன் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. இதில், அவர் குன்னுார் உமர் பாரூக்குடன் அடிக்கடி பேசியிருப்பது உறுதி செய்யப்பட்டது.

இருவரும் அடிக்கடி 'வாட்ஸ் ஆப்'பில் உரையாடியுள்ளனர். இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பதும், அடிக்கடி கோவை, குன்னுார் என மாறி, மாறி பயணம் செய்து சந்தித்ததும், விசாரணையில் உறுதி செய்யப்பட்டது.
கார் குண்டு வெடிப்பு நடந்தவுடன், வாட்ஸ் ஆப் தகவல் பரிமாற்றத்தை உமர் பாரூக் அழித்தது கண்டுபிடிக்கப்பட்டது.






ஜமேஷா முபீன் சதித்திட்டத்தில் உமர் பாரூக் முக்கிய கூட்டாளி என்பதை புரிந்து கொண்ட என்.ஐ.ஏ., தனிப்படையினர், அவரை கைது செய்தனர். அவர்களுடன் சந்திப்பில் பங்கேற்ற பெரோஸ் கானும் கைது செய்யப்பட்டார்.
ஜமேஷா முபீன், தன் நண்பரான முகமது தவுபீக்கிடம் ஒரு புத்தகத்தை கொடுத்துள்ளார். அதில், வெடிகுண்டு செய்வது தொடர்பான விபரங்கள் இடம் பெற்றிருந்தன.
அவரது வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில், குறிப்பிட்ட அந்த புத்தகம் மட்டுமின்றி, மத அடிப்படைவாதம் தொடர்பான பிரசுரங்களும் கைப்பற்றப்பட்டன.

தவுபீக்கிடம் என்.ஐ.ஏ., தனிப்படையினர் விசாரித்து, அவருக்கும் சதித்திட்டத்தில் பங்கு இருப்பதை உறுதி செய்தனர்; இதையடுத்து, அவரும் கைது செய்யப்பட்டார்.
வரும் நாட்களில், இம்மூவரையும் கஸ்டடியில் வைத்து விசாரிக்க என்.ஐ.ஏ., தனிப்படையினர் திட்டமிட்டுள்ளனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (27)
PalaniKuppuswamy - sanjose,இந்தியா
09-டிச-202219:58:42 IST Report Abuse
PalaniKuppuswamy எதற்கு தான் ஆளுநர் தீவிரவாதிகளின் திட்ட அடையாளம் சான்றுகள் அழிந்துவிடும் காலதாமதம் என்று , குண்டு விடிந்தவுடன் எச்சரிக்கை செய்தார் . உருட்டு திருட்டு கூட்டத்திற்கு ஏமாற்ற மட்டுமே தெரியும் . இப்போ புரிகிறதா ஆளுநரின் அருமை .
Rate this:
Cancel
09-டிச-202218:56:44 IST Report Abuse
பேசும் தமிழன் கொண்டு போய் திகாரில் அல்லது உபி சிறையில் அடையுங்கள் ....இங்குள்ள சிறையில் அடைத்தால் ....பிரியாணி சாப்பிட்டு ....இன்னும் எங்கே குண்டு வைக்கலாம் என்று சிந்திக்க தோணும்
Rate this:
Cancel
Duruvesan - Dharmapuri,இந்தியா
09-டிச-202218:09:24 IST Report Abuse
Duruvesan பாஸ் அதுல கட்ட அடிப்பீங்களா 🥹
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X