நாகப்பட்டினம் : நாகையில், மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் ரவுடி சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
அப்போது அங்கு பைக்கில் வந்த ஐந்து பேர், திடீரென சிவபாண்டியை சுற்றி வளைத்து பட்டாக்கத்திகளால் சரமாரியாக வெட்டினர். இதில் தலை சிதைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே அவர் இறந்தார்.
உடனிருந்த அவரது நண்பர்கள் தப்பிச் சென்றனர். தகவல் அறிந்த அவரது உறவினர்கள் சம்பவ இடத்தில் குவிந்தனர். எஸ்.பி., ஜவகர் சம்பவ இடத்தை பார்வையிட்டார்.
அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி., கேமராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில், போலீசார் கொலையாளிகளை தேடி வருகின்றனர்.