தொண்டாமுத்துார்: உலகளவில் ஏழு பிராந்தியங்களுக்கான 'மண் காப்போம்' கொள்கை விளக்க புத்தகத்தை, ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு வெளியிட்டார்.
சத்குரு பேசியதாவது:
'மண் காப்போம்' இயக்கத்துக்கு கிடைத்துள்ள சர்வதேச ஆதரவின் அடிப்படையில் பார்க்கும்போது, அரசாங்கங்கள் இதற்கான கொள்கைகளை கட்டாயம் உருவாக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. மக்களின் ஆதரவு குரல்கள் சத்தமாக ஒலிக்காமல், அரசாங்கங்கள் எந்த ஒரு செயலிலும் விரைந்து செயல்படாது. எனவே, மண்வள பாதுகாப்பை ஒரு தேர்தல் பிரச்னையாகவும் மாற்ற வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.
ஐ.நா.,வின் பாலைவனமாதலை தடுக்கும் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் இப்ராஹிம் தியாவ், ஆஸ்திரேலிய வேளாண் வல்லுனர் டோனி ரினாடோ, 'ஜி 20 லேண்ட் இனிஷியேடிவ்' அமைப்பின் இயக்குனர் முரளி தும்மருகுடி மற்றும், 31 நாடுகளை சேர்ந்த, 155 மண்ணியல் வல்லுனர்கள் கலந்து கொண்டனர்.